உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11 துக் காட்டுக்களிலிருந்து கிளைக்கதைகளை வேறுபடுத்திக் காணாததேயாகும். கிளைக்கதைகளைப் பகுத்துக் காண்பதில் ஏற்படும் சிக். கல்களை, மேலும் தெளிவாக்க, அக்கிளைக்கதைகளுக்குரிய தெளிவான இலக்கணங்களை வரையறுக்கமுயலுதல் வேண்- டும். இம்முயற்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டபோது, அவர்களுக்குக் கீழ்க்கண்ட விளக்கங்கள் கிடைத்தன. 4. 0 கிளைக்கதைகளின் இலக்கணம் : 1. தொடர்ந்து விளக்க நடையில் (descriptive) சொல்- லப்படும் காப்பிய மையக்கதையினூடே அமையும் ஒரு கதை நிகழ்ச்சி. 2. ஒரு நிகழ்ச்சி அல்லது சாட்சி கதைப்படுத்தப்பட்டி ருக்கும். அது, வெளிப்படையாகவே பரிணமளித்துத் தோன் ரம். அதாவது, கதையானது, படிப்பவரின் ஊகத்திற்கு விடப்படாது, காப்பியப் புலவராலேயே விவரிக்கப்பட்ட தன்மையதாய் அமைந்திருக்கும். 3. பெரும்பாலும் கூற்றுமுறையில் அமைந்திருக்கும். மிகச்சிறுபான்மை மாறுபட்டும் அமையலாம். கூற்றுக்குரிய- வராகக் காப்பியப் பாத்திரங்களோ, காப்பியப் பாத்திரமல்- லாத தெய்வீகப் பாத்திரங்களோ, காப்பியப் புலவரோ அமைவர். 4. காப்பியக் கிளைக்கதைகள் நடந்த கதையாகவே அமைந்திருக்கும். பெரும்பாலும் காப்பியம் நடந்த காலத்- திற்கு முன்பு நடந்ததாக அமைந்திருக்கும். சிறுபான்மை இடங்களில் காப்பியம் நடந்த காலத்தில் நடத்திருந்தாலும், நடக்கின்ற நிகழ்ச்சியாக அல்லாமல், நடந்த நிகழ்ச்சியாகவே அமைக்கப்பட்டிருக்கும். இந்நான்கையும் கிளைக்கதைகளைப் பிரித்தறிவதற்குப் பயன்படும் அடிப்படை இலக்கணமாகக் கொள்ளலாம்.