________________
12 5.0 கிளைக்கதைகளை காப்பியப்புலவன் எடுத்தாளும் நோக்கம்: காப்பிய உறுப்பாக விளங்கும் கிளைக் கதைகளைப் புலவன் வெற்றெனத் தொடுத்திருக்க முடியாது. கினைக் கதைக்கென கிளைக்கதைகள் வருவதனைப் பழங்கதைகளி லும் இன்றைய காலட்சேபம் என வழங்கும் சொற்பொழிவு வகையிலும் காணலாம்'.93 இது, மக்களின் கதைகேட்கும் ஆர்வத்தையே காட்டுகிறது. இப்படிக் கதை கேட்கும் நோக்கையே பிரதானமாகக் கொண்டு காப்பியங்களில் கிளைக்கதைகள் எடுத்தாளப்படவில்லை. காப்பியக் கிளைக் கதைகளை ஆராய்ந்தபோது புலவன் கீழ்கண்ட நோக்கங்- களுக்காக எடுத்தாண்டுள்ளான் என்பது பெறப்படுகிறது. 5.1 தலைமைப் பாத்திரங்களின் பண்பை உயர்த்திக் காட்டுவதற்காக: சான்று: சிலப்பதிகாரத்தில் மாடலன் கூறும் கோவலனைப் பற்றிய மூன்று கிளைக்கதைகள். சிலம்பின் தலைவனான கோவலனை, கருணை மறவனாக, செல்லாச் செல்வனாக இல்லோர் செல்வனாக, அவன் பண்பை இக்கதைகள் மிகு- வித்துக் காட்டுகின்றன.4 5.2 காப்பியக் கதைப்போக்கின் தெளிவிற்காக: படிப்பவர்களிடையே ஏன்? எப்படி? எவ்வாறு? என்ற வினாக்கள், இவ்வகைக் கிளைக்கதைகள் இல்லையெனில் எழக்கூடும். சான்று: சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி முற் பிறப்புக்கதை. சிலம்பின் நாயகன் இம்மை செய்தது நல் வினையாகவே இருக்க, கொலைத் தண்டனை பெறக் கார- ணம் யாது எனப் படிப்பவர் மனதில் எழும் வினாவை இச்- கிளைக்கதை தெளிவுறுத்துகிறது. 35 5.3 முலக்கதையின் திருப்பத்திற்கு வழிகோல்வதாக