பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

πίν வேறு பெயரால் வர்ணிக்க முடியவில்லை, இந்தி யாவில் மிகப் புராதன காலத்தில்கூட, சரித்திர காலத்திற்கு முன்புகூட, மனிதர்களைச் சாப்பிடக் கூடிய ராக்ஷஸர்கள் இருந்ததேயில்லை....... இந்த ராக்ஷஸர்' என்ற பயங்கரப் புரளியானது வைதீகப் பார்ப்பனரின் மூளையில் தோன்றிய கற்பனையே யாகும்.” நாகேந்திர நாத் கோஷ், M. A., B. L. கல்கத்தா ஹைகோர்ட் "இந்திய ஆசியரின் இலக்கியமும் கலையும்' (பக்கம்-194) O 34. "விஷ்ணு என்ற கடவுள் ஒரு க்ஷத்திரிய வீரனாக வணங்கப்பட்டு,ஆரியக் கூட்டத்தாருக்கு அடிக்கடி போதனை செய்யவும், அவர்களுக்கு வெற்றியுண் டாக்கவும் அடிக்கடி. அவதாரஞ் செய்வதாக எல் லோராலும் கருதப்பட்டது." E.P. ஹாவெல், "இந்தியாவில் ஆரியர் அரசாட்சியின் சரித்திரம்' (1918)-(பக்கம்-33) 35. "சுருங்கக் கூறவேண்டுமானால், பிராம்மணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக்கொண்டு, தங்களுடைய நிலைமையைத் துஷ்பிரயோகப் படுத்தி, தாங்கள் இஷ்டம்போல் எழுதிய கட்டுக் கதைகளுக்கு எல்லச விஷயங்களையும் உட்படுத்தி வைத்தார்கள். இந்த கற்பனைக் கதைகன் அனைத்தும் வேண்டுமென்றே, கெட்ட எண்ணத் துடன், சாமர்த்தியமாய் பிறரை அழுத்தி, தங்கள் நிலைமையை உயர்த்திக்கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்." ஹென்றி பெவரிட்ஜ், "விரிவான இந்திய சரித்திரம் முதற்பாகம் (1865)(பக்கம்-15)