பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

XV சின் 36. "சரித்திரத்திற்கு முந்திய காலத்துச் சில னங்கள் தவிர, வட இந்தியாவிலுள்ள திராவிடக் கலை, நாகரீகம் அத்தனையும் ஆரிய வெள்ளத் தால் அடித்துக்கொண்டு போகப்பட்டது. ஆனால் தென் இந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை; நடக்க முடியவுமில்லை. இங்கு ஆரிய நாகரீகம் மிகச் சாதாரண முறையில்தான் பரவ முடிந்தது. அதனுடைய பேரலைகள் இங்கு சிறு சிறு துளி களாகச் சிதறடிக்கப்பட்டன.' K.N.சிவராஜ பிள்ளை, B A. தமிழ்ப்பேராசிரியர், சென்னை சர்வகலாசாலை, "பண்டையத் தமிழர்களின் வரலாறு' (1932)(பக்கம்-4) 37. "இதிகாசங்களில் தெட்சிண இந்தியாவைப்பற்றி எழுதும்போது, காட்டுமிராண்டிகளும், அசுரர் களும், ராக்ஷஸர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகளைக்கொண்ட பிரதேசம் என்று கூறப்பட்டிருக்கிறது.' G.H. ராலின்ஸன், C. I. E. "இந்தியா" (பக்கம் - 155) O 33. "இந்திய ஐரோப்பியர்களால் தோற்கடிக்கப்பட்ட கருப்பு மனிதர்களை தஸ்யூக்களென்றும், கொள் ளைக்காரர்களென்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்களென்றும், வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கிறது.' பால் மாஸின் அவர்ஸெல், "புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரீகமும்' (1934) (பக்கம்-19)