பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இரணியன் எதிர்த்தவனை நாசம் செய்வேன் என்று சொல்வ தல்லவா வீரனுக்கழகு! ப்ரகலாதன்:- [தன்னை வந்து பயத்தால் அணைந்து கொண்ட சித்ரபானுவை நோக்கி] கண்மணி ! நீ வருந்தாதே! நமக்குத் தீமை செய்வோன் என் தந்தை மாத்திரமன்று; எவராயினும் சரி! தும்ஸப் படுத்துவேன்! அஞ்சாதே!- மாமர! சித்ரபானு வை நான் என் உயிர் என்று நினைப்பது உண்மை யானால் ஆர்ய தர்மத்தை இந்த உலகத்தில் நிலை நாட்ட என் உயிர் உபயோகப்படட்டும். அனைவரும்:-- ஆஹா! பேஷ்! பேஷ்! கஜகேது:- இன்றல்லவோ நான் ஒரு தியாகியை, ஒப்பற்ற வீரனை, இளஞ்சிங்கத்தை மருமகனாக அடைந் தேன்! ப்ரகலாதன்:- மாமா! எனக்குத் தக்க ஆதரவு கிடைக் கும்வரைக்கும் எனக்கும் சித்ரபானுவுக்கும் நடை பெற்ற கலியாணத்தைப்பற்றி எவருக்கும் சொல்லி விடாதீர்கள். ஆனால் எனது நண்பனாகிய காங் கேயனை உங்களுக்குத் தெரியுமர? —-— கஜகேது:- சுத்தமாகத் தெரியாது. ப்ரகலாதன்:- அவன் ஒரு சுத்த ஆர்ய ஸ்ரேஷ்டனா யிற்றே! உமக்கெல்லாம் தெரியாதிருக்க நியாயமில் லையே! கஜகேது :- எமக்குத் தெரியாததால் அவன் சுத்த ஆர்ய னாயிருக்கமாட்டான். அதுபற்றி என்ன?