இணையற்ற வீரன் 26 காங்கேயன்:- அப்படியானால் இத்தனை நாள் நீ எங்கே தான் போயிருந்தாய் ? ப்ரகலாதன்:- பிறகு சொல்லுகிறேன். அதோ! யாரேச வருகிறார்கள். அவர்கள் நம்மை கோக்கி வருகிறார் கள் போலிருக்கிறது.... [ உற்றுக்கவனித்து] சரி, சரி,காங்கேயா ! கி இங்கேயே இரு. கான் வந்து விடுகிறேன். ப்ரகலாதன்:- (தன்னை நோக்கி வந்த மகரிஷி ஒருவர், சித்ரபானு, கஜகேது ஆகியோர்களை கொண்டு] மாமா! நாயகி! என்ன விசேஷம்? யாரால் உங்கட்கு இன்னல் ஏற்பட்டது? முகவாட் டத்திற்குக் காரணம் என்ன? எதிர் மகரிஷி:- இளவாசே! உமது மாமன், உமது காதலி துக்கக்கடலில் ஆழ்ந்துள்ளார்கள். அவர்களால் பேச முடியாது. அவர்களின் உள்ளம் குமுதுவது அவர்கனின் முகத்தில் தோன்றவில்லையா? என்ன செய்வது? பரிதாபம்! ஒரு பக்கம் இரண்யச்சக்க வர்த்தியோ உமது தந்தை. உமது தக்தையாரால் சிறைப்படுத்தப்பட்ட ஆசிய ஜனங்களோ உமது மாமனாரின் பத்துக்கள். இந்தத் தர்ம சங்கடத்தில் நாங்கள் என்ன செய்வதென்று தோன்றவில்லை. ப்ரகலாதன்:- அப்படியா? மகரிஷி:- விஷயத்தைப் பொறுமையாய்க் கேளும். உமது பத்னி சித்ரபானு இருக்கிறாளல்லவோ! அவ ளுடைய தாய்ப்பாட்டன், பாட்டி, சிற்றப்பன், சிற் நன்னை, அவர்களுடைய பிள்ளைகள் ஆகச் சுமாச்
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/44
Appearance