இரணியன் சித்ரபானு:- பாதகமில்லை; சென்று பார்க்கலாம். ப்ரகலாதன்:- என் தந்தையின் அந்தப்புரம் மிக்க பாது காவல் உடையது. நி போகலாகாது. 32 சித்ரபானு:- நீர் பயப்படவேண்டாம். சனும் யுத்தப் பயிற்சி உடையவன்தான். [மேல் மாடியிலிருந்து ஜன்னல் வழியாக அந்தப்புரத்தில் துழைதல்] நாதரே! நீங்கள் அங்கேயே இருங்கள்.கான் பார்த்து விட்டு வந்து விடுகிறேன். ப்ரகலாதன்:- ஜாக்கிரதை! அரவங்காட்டாதே! சீக் திரம் வந்துவிடு. [இரணியன் அத்தப் புரத்தில் மஞ்சத்தில் லீலாவதி யுடன் நித்திரையிலிருப்பதைச் சித்ரபானு கவனித்துப் பல பக்கங்களிலும் கவனித்தபின் தனது ஈட்டியின் கூச் மையை ஒருமுறை கையில் தடவிப் பார்த்து இரணியன் மார்பில் குறிவைத்து எறிதல். ஈட்டி இரணியன் மார்பில் பட்டு ஊடுருவாமல் கீழே விழுகிறது.] (பாட்டு-6) இரணியன்:- [மார்பில் கைவைத்தபடி திடுக்கிட்டு எழுந்து நிதானித்து] யாரடா காவலர்! [ உடனே நான்கு காவலர்கள் ஆயுதத்துடன் ஓடிவருதல். இர ணியன் சமீபத்தில் கிடந்த ஈட்டியைக் கையில் எடுத்துக் கவனித்து] காவலர்களே! மாளிகையின் மேற்புறத்திலிருந்து யாரேச என் மார்பை நோக்கி இந்த ஈட்டியை எறிந்தனர். தேடிப்பிடியுங்கள். லீலாவதி:- [நிடுக்கிட்டெழுத்து கவனித்து] அந்தோ நாதா! [இரணியன் மார்பைத் தடவுதல்)
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/51
Appearance