48 இரணியன் லல்லவே! சக்ரவர்த்தியின் கட்டளையாலல்லவா? சரி; உன் விரதம் முடிந்து விட்டதா? சித்ரபானு:- என் விரதம் முடிந்து விட்டது. உங்களை முதன் முறையாகக் கட்டித் தழுவி முத்தமாவது தந்து போகும் கருத்தில் ஓடிவந்தேன். என் தாய் தந்தையர் தடை செய்யக்கூடுமோ என்னவோ என்று நினைத்து மாறுவேடத்துடன் வந்தேன். நான் தங்களுக்குத் தரப்போகும் ஆரம்ப முத்தம் ஆரியக் கொலைகளுக் கிடையிலா? நாதா வேண்டாம். அவர்களை விடுதலை செய்யுங்கள் [கட்டி முத்தம் கொடுக்கிறாள்] சேனாதிபதி:- என் ஆசைமயிலே! இந்தக் குற்றவாளி களை விடுதலை செய்துவிடத் தடையில்லை. சக்ர வர்த்திக்கு என்ன பதில் சொல்லுவது? சித்ரபானு:- இதுதானா தெரியாது? கொலையாளிகளை இங்கே கொன்று போடுங்கள். ஆரிய ஜனங்களை விடுதலை செய்யுங்கள். சக்ரவர்த்தியினிடம் சென்று "திடீரென்று ஓர் ஒளி தோன்றிற்று; பிறகு அந்த ஒளி மறைந்து விட்டது; நான் மூர்ச்சையுற்றும் போனேன்; பிறகு மூர்ச்சை தெளிந்தது; ஆரிய ஜனங்களைக் கொலைக்களத்தில் காணவில்லை; என்னுடன் வந்த கொலையாளிகள் மாண்டு கிடந்த னர்' என்று கூறிவிடுங்கள். நாதரே நம்மை நேரக்கி இந்தச் சக்ரவர்த்தியின் க்ரீடம் வந்து கொண்டிருப் பது உமக்குத் தெரியுமா? சேனாதிபதி:- அதெப்படி?
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/67
Appearance