உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இரணியன் அந்தச் சிறுவனுக்கு நீங்கள் அநுசரணையாக நடந்துகொள்ளுங்கள் என்று உம்மிடம் சொல்லச் சொன்னார்கள். அந்தோ! அதோ, யாரோ வரு கிறார்களே!நான் போய் விடுகிறேன். [போதல்] [சேவகர்கள் சேனாதிபதியை நோக்கி வருகி றார்கள்.சேனாதிபதி மூர்ச்சையாய்க் கிடப்பது போல் தரையில் படுத்துக்கொள்ளுகிறான். சேஷ கர்கள் கவனித்துவிட்டு சேவகர்கள் - அந்தோ! இதென்ன அநியாயம்! கொலையாளிகள் வெட்டப்பட்டுக் கிடக்கிறார்கள்? நமது சேனாதிபதியவர்கள் பிரக்ஞையற்றுக் கிடக் கிறார்! ஆரியரின் சூழ்ச்சியோ! அல்லது அந்த ஆரியர் சொல்லுகிறபடி தெய்வபலமோ தெரிக வில்லையே! [சேனாதிபதியைத் தேற்றுகிறார்கள். சேனாதிபதி மெதுவாக எழுந்து) சேனாதிபதி:- அந்தோ! நான் எங்கே இருக்கிறேன் ? சேவகர்:- ப்ரபூ! இதென்ன கோலம்? இவர்கள் வெட்டப்பட்டுக் கிடக்கிறார்கள்! ஆரியர்கள் எங்கே? சேனாதிபதி:- சேவகர்களே ! குற்றவாளிகளை அழைத் துக்கொண்டு கொலைக்களம் வந்து சேர்ந்தேன். அதுதான் எனக்குத் தெரியும். கொலைக்களத் திற்கு வந்தவுடன் மின்னல்போல் திடீரென்று ஓர் ஒளி தோன்றிற்று. அதற்குமேல் எனக்கு ஒன்றும் தெரியாது. இதோ! இக்கோலத்தை இப்போது காண்கிறேன். சீக்கிரம் இதைவிட்டு நீங்குவோம். [அனைவரும் போதல்]