அத்தியாயம் 9. இடம்:- அரண்மனையில் ஓர் பாகம். பாத்திரங்கள்:- இரணியன், மக்தீரி, ப்ரகலாதன், சேனாதி பதி, சேவகர்கள். [இரணியன் இருக்கை நோக்கிப் ப்ரகலாதன் ஓடி வத்து பணிகிறான். இரணியன் ஆலிங்கனம் செய்துகொண்டு.] இரணியன்:- அப்பனே ! வந்துவிட்டாயா? ப்ரகலாதன்:-- என் சுற்றுப் பிரயாணத்தைச் சுருக்க மாகவே முடித்துக்கொண்டேன். என் அன்னை என் பிரிவை சகிக்கமாட்டார்களாதலால், அன்றியும் தங்களைப் பிரித்திருக்கவும் என்னால் முடியவே இல்லை. இரணியன்:- உண்மையில் உனது அன்னைக்கு ஏற் பட்ட துயரத்தை என்னால் மாற்ற முடியாதி ருந்தது. சீக்கிரமாக நீ வந்ததே கல்லதாயிற்று. அப்பனே ! நீ சென்ற தேசத்திலெல்லாம் இந்த ஆகி யர்களின் சூழ்ச்சி எவ்வாறிருக்கிறது? ப்ரகலாதன் :- தந்தையே ! ஆரியரை வணங்குவதன் மூலமே ஆங்காங்குள்ள அரசர் தமது காரியத்தை முட்டின்றி முடித்துக்கொள்ளுகின்றனர். குடிகன் அரசனை மதிப்பதைவிட ஆரியருடைய வேதத்தை மேலானதென எண்ணி வழிபடுகின்றனர். அவர் களுடைய தெய்வ பலமே அதற்குக் காரணம்.
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/74
Appearance