பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இரணியன் வார்த்தை ஆரியர்களின் அயோக்கியத்தனமான வார்த்தைகளை அரண் செய்வதாகவன்றோ இருக் கிறது? இதைத் தமிழர் அறிந்தால். ஆரியர் வலையிற் சிக்கி, இவ்வரசாங்கத்தையே கவிழ்க்கவும் ஆயத்தமாய் விடுவார்களே ! உன்னை நான் நம்புகிறேன். ஆயினும், "ஜோதி தோன்றிற்று; உடனே மூர்ச்சையானேன்; ஆரியரைக் காணவில்லை; கூடவந்தவர் வெட்டுப் பட்டுக்" கிடந்தார்கள்," என்பதைப் பகுத்தறிவு எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் ? ஒருக்கால் உன்னை ஆரியர் பின்னின்று மூர்ச்சையாகும்படி செய்து விட்டார்கள் என்றாலும் நம்பமுடியும். சேனாதிபதி:- எான் ஒரு வேளை புத்தி தடுமாறிவிட்ட தாகவும் இருக்கக்கூடும் என்பதை ஒத்துக்கொள்ளு கிறேன். இரணியன் :- இருக்கலாம். ஏனென்றால் இதற்குமுன் எத்தனையோ ஆரியர்களையும் ஆரியப்பாதிரி களையும் நான் சிரச்சேதம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஜோதி தோன்றவில்லையே! தப்பியோடவுமில்லையே !- சேனாதிபதியே! கடை சியரக உனக்கு ஒரு வார்த்தை. தமிழர் காடு. நாம் தமிழர். கமது உடம்பில் தமிழாத்தம் வீறிட் டோடுகிறது. தமிழர் கம்மை நம்புகிறார்கள்.காம் அவர்களைக்காக்கவேண்டும். தரம் சம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். சுய மரியாதையை இழக்கலாகாது. தெரியுமா? சென்றுவா. [சேனாதிபதி போய்விடுகிறான்]