இணையற்ற வீரன் மக்த்ரீ! என் மைத்தன் தனது சுற்றுப்பிரயாண அனுபவத்தை என்னிடம் சொன்னதை நீ கேட்டா யல்லவா? என்கும் ஆரியர் செல்வாக்கே அதிகமா யிருக்கிறதென்றும் அவர்கள் தெய்வபலமே அதற் குக்காரணமென்றும் சொன்னான். சேனாதிபதி யோவெனில்; ஜோதி தோன்றிற்று என்கிறான். மனோபாவம் நம்மையும் திடுக்கிட இவர்களின் வைக்கிறது. மக்திரி - அரசே! நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! இதே கிமிஷத்தில் ஆசியப்பூண்டே இந்காட்டில் இல்லசதபடி செய்துவிடுவதும் உசிதம் என்று எண்ணுகிறேன். இந்தச் சேனாதிபதியாலும் இந்த ஏதோ- கெடுதி தங்கள் குமரானாலும் ராஜ்யத்திற்கு உண்டாகப் போகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் மிக்க ஜாக்கிரதை யாக இருக்கவேண்டும். வீரத்தனம் மிகுந்த பகை வரை கரம் வரவேற்கிறோம். ஆனால் நமக்கு கண்பர்போலவும் உறவினர் போலவும் உள்ள அயேசக்கயர்களை நாம் விட்டு வைக்கலாகாது. 59 இரணியன் :- மந்திரி ! உண்மையே. ஆரியர் சூழ்சி சியைக் கண்டறிவதில் காம் கண்ணுங்கருத்துமா விருக்கவேண்டும். மக்திரி:- அவ்வாறே. இரணியன்:- தான் விடைபெற்றுக்கொள்ளுகிறேன். [மறைவு]
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/78
Appearance