பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 10. - இடம்:- நகரவீதி. பாத்தீரங்கள்:- தலையாரி, மாறுவேடம் பூண்ட அரசன்; மாறுவேடம் பூண்ட மந்திரி, ஜனங்கள். தலையாரி:- [முரசறைந்து] நாளை அதிகாலையில்நமது சக்ரவர்த்தி குமரரருக்கு இளவரசுப்பட்டம் சூட்டப் போவதால் அனைவரும் ஊரையும் வீடுகளையும் அலங்காரம் செய்வதோடு, பட்டஞ் சூட்டும் வைப வத்திற்கு விஜயம் செய்யும்படியும் சக்ரவர்த்தி யவர்கள் கேட்டுக்கொள்ளுகிறார்கள். வீதியிலுள்ள ஜனங்களில் ஒருவன்:- (மற்றவர்களை; நோக்கி] ஐயையோ! நாம் சக்ரவர்த்தி கட்டளைக்கு இணங்க முடியாது. சக்ரவர்த்தி பூசுரர்களாகிய ஆரிய ஜனங்களுக்கு விரோதி. ஆரியர்களின் விரோதிகளா யிருந்தால்தான் திடீரென்று இறந்து போகிறார்களே ! மற்றொருவன்:- சேனாதிபதி ஆரியர்களுக்குக் கொஞ்சம் வேண்டியவராயிருந்ததினால்தான் அவர் தலை தப் பிற்று. இல்லாவிட்டால் நாலுபேரோடு அவரும் மாளவேண்டியதுதானே! இன்னொருவன்:-- நாம் ஆரியர் சொல்வதைத்தான் நம்ப வேண்டும். ஒரு வீடு இருக்கிறது. அதைக் கட்டி யவன் ஒருவன் இருப்பான். அதுபோலவே இந்த உலகம் இருக்கிறது. அதை உண்டாக்கியவன்