64 இரணியன் [பொது மக்களிற் சிலர் சபையை நோக்கி வருகி றார்கள்.] அன்புள்ள குடிகளே! அனைவரும் அமரும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். [முரசு முழங்குகிறது. ஒருவர் தட்டில் இளவாசின் க்ரீடந்தாங்கிவருதல். சகல வாத்தியமும் முழங்கு கின்றன.) [ப்ரகலாதனைச் சேனாதிபதி அழைத்து வருதல்] மந்திரி:-- [ப்ரகலாதனை யழைத்து இளவரச ஆசனத் தின் அருகில் நிற்க வைத்து] நமது சக்ரவர்த்தி இரணியநாமத்தால் - இந்நாள் பலதேச அரசர்கள் திருமுன்பும், தேசப்பெருமக்கள் திருமுன்பும், சக்ர வர்த்தி திருமகனார் ப்ரகலாதனுக்கு இளவரசம் பட்டத்தை நான் சூட்டுகிறேன். [ப்ரகலாதனை நோக்கி] முறைப்படியும், இக்காட்டை இரணிய குமாரா! தமிழர் இவ்வரசாங்க வழக்கப்படியும், பின்னாளில் நீ உனது தந்தையார் ஒழுகிய நெறியே ஆட்சி செய்வதாய் உறுதி கூறுவதற்கு அறிகுறியா கவும், ராஜ விஸ்வாசப் பிரமாணமாக "இரணிய நாமத்தை வாழ்த்துகிறேன்" என்றுஉன் மனதாரச் சொல்லி இவ்வாசனத்தில் அமர்வாயாக. (உடனே அங்கு மாறு வேடத்தோடு அமர்ந்திருக் கும் சித்ரபானு எழுந்து தானிருப்பதை ஞாபகப் படுத்துவதாகச் சமிக்ஞை செய்து அமர் தல்]
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/83
Appearance