70 இரணியன் ப்ரகலாதன்:- லாவிடு! வாவிடு! சேனாதிபதி:- இளவரசே! என்ன விசேஷம்? உமது அன்னை உமக்குப் புத்தி சொன்னார்களா? ப்ரகலாதன்:- எவ்வளவோ சொன்னார்கள். என் புத் தியைக் கலைக்க முடியாது. அது கிடக்கட்டும். கான் உம்மைக் கண்டு கேட்க நினைத்திருந்த விஷ யம் ஒன்று. கொலைக்களத்திற்கு அன்று குற்ற வாளிகளை நீர் அழைத்துப் போன போது கடந்த புதுமை என்ன ? ஜோதியைக் கண்டீராமே! (பாட்டு-19) சேனாதிபதி:- எந்த ஜோதியை? உமக்கென்ன பயித் தியமா? ஆரியப் பாதிரிகள் சொல்லியபடி குற்ற வானிகளாகிய ஆரியர்களை விடுவிக்கவும் சக்ரவர்த் தியை ஏமாற்றவும் அவ்வாறு சொன்னேன். ப்ரகலாதன்:- அப்படியா? பின் என்னதான் கடந்தது? சேனாதிபதி:- இதென்ன? பிறகும் அதென்ன என்று றீரே! குற்றவாளிகளை வீட்டிற்கு அனுப்பிவிட் டேன். என்னுடனிருந்த நான்கு கொலையாளி களும் இதைச் சக்ரவர்த்தியாரிடம் சொல்லிவிடக் கூடும் என்று நினைத்து அவர்களை வெட்டிவிட் டேன். ப்பாகலாதன்:- இவ்வளவுதானா? சேனாதிபதி:- வேறென்ன இருக்க முடியும் ?
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/89
Appearance