பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இணையற்ற வீரன் சேவகர்கள் :- தாங்கள் சொன்னபடி செய்யத்தடை யொன்றுமில்லையே! சேனாதிபதி - சக்ரவர்த்திவிடம் போய் ஆச்சரியத் தோடும் பரபரப்போடும் என்ன சொல்லவேண்டும் தெரியுமா? சங்கிலியால் இளவரசரைக் கட்டி னோம். சங்கிலி பொடிப்பொடியாய் உதிர்ந்து விட்டது. பிறகு நெருங்க முடியவில்லை. அக் நினி ஜ்வாலை வீசுகிறது. நாங்கள் பயந்து வந்துவிட்டோம்," என்று தைரியமாகச் சொல்ல வேண்டும். சங்கிலியை இங்கேயே போட்டுவிட்டுப் போய்விடுங்கள். சேவகர்கள்:- அவ்வாறே ! [போகிறார்கள்] சேனாதிபதி:- [அவசரமாக] இளவரசே! இனித் தாமதிக்கலாகாது. இனிச் சக்ரவர்த்தி கோபாவேசத் துடன் இங்கு வரக்கூடும். நாம் தக்க ஏற்பாட் டோடு இருப்போம். உமது உயிருக்கு எதாவது தீமை ஏற்படும். இதோ வருகின்றேன். [சேனாதிபதி ஓடுகின்றான்)