பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் நம்பிக்கையில்லை. நமது சூழ்ச்சி அனைத்தும் அவனுக்குத் தெரியும். அவனை விட்டு வைத்தால் நமக்கு அவனாலும் ஆபத்து நேரிடும். சக்ர வர்த்தியிடமிருந்து சேவகர்கள் அடிக்கடி வந்து போவதால் இளவரசனுடன் நெருங்கவோ, அல்லது சேதி தெரிவிக்கவோ முடியாததால் நான் அவசர மரக ஒரு கடிதத்தை எழுதி இளவரசரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். அக்கடிதத்தில், "இதே சமயத்தில் சேனாதிபதியையும் ஒழித்து விடவேண்டும்," என்று விபரமாய்க் குறிப்பிட்டிருக் கிறேன். சீக்கிரம் நாம் அங்கு போகவேண்டும். [அனைவரும் ப்ரகலாதன் தனியறையைச் சார்ந்த பல பக்கங்களிலும் ஓடி ஒழிந்துகொள்ளுகி றார்கள்.] அத்தியாயம் 14. 75 இடம்:- கொலுமண்டபம். பாத்திரங்கள்:- இரணியன், மந்திரி சேவகர்கள். போர்வீரர்கள் [இரணியனை வணங்கி] பெருமானே ! நாங்கள் இளவரசைக் கட்டினோம். இளவரசர் கட்டுப்படவில்லை. ஏதேதோ பேரைச் சொல்லூ கிறார். எங்களை ஒருவித அக்னி ஜ்வாலை நெருங்க விடவில்லை. இனி நெருங்கினால் நாங்கள் வெந்து போவது நிச்சயம். (பாட்டு -20)