உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 இரத்தக் கண்ணீர் வேதாளம்: அடுத்ததா? சொல்கிறேன். முத்தன் எப் படியும் மீட்டு விடுவான். இருவரும் தப்பி ஓடி வரு வார்கள். அப்போது நமது குதிரை வீரர்கள் சிலர் அவர்களைத் தாக்க வேண்டும்--முத்தனை விட்டு முத் தாயியைப் பிரித்து அவளைத் தங்களிடம் கொண்டு வந்துவிட வேண்டும். முத்தன் -காதலி போன தெரியாமல் தவிப்பான். எக்கேடாவது கெட்டுப் போகிறான் நமக்கென்ன? இடம் வெற்றிவேலன் : சரி, அப்படியானால் முத்தாயியைத் தூக்கிவர உமது தலைமையிலேயே குதிரை வீரர்களை அனுப்புகிறேன். வேதாளம்: சந்தோஷம்! நானும் உடனே புறப்பட்டு ஆனந்தபுரம் செல்கிறேன் ! ஏனெனில் முத்தாயியை உயிரோடு உங்களுக்குத் தரவேண்டுமல்லவா? வெற்றிவேலன் : சரி, வேதாளம்! இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முத்தன் ஒரு தீர்க்கமான முடிவுடன் அதை விட்டுப் போய்விடுகிறான்.