உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 இரத்தக் கண்ணீர் வேதாளம்: என் அழுகிறாய்? முத்தாயி: ஊர் சிரிக்கிறது ! நான் அழுகிறேன்! மீள்வ வேதாளம்: உண்மைதான் ஆனாலும் கொழுந்து மனம் படைத்த கோதையே - கொந்தளிப்பிலிருந்து தற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது எ உணருவாய்! முத்தாயி: மீள்வதற்கு வாய்ப்பா? என்பதை வேதாளம்: ஆமாம், வாய்ப்புத்தான்-உன் விடுதலைதான்! வேதனை விலகுகிறது என்ற அறிகுறி தான். வேதா ளத்தின் வடிவத்திலே வந்திருக்கிறது. முத்தாயி: என்ன சொல்கிறீர்கள்? வேதாளம்: முத்தனும் நானும் எவ்வளவு நேசமுடன் பழகினோம் என்பது உனக்குத் தெரியாது. நீ கொடுத் தனுப்பிய பொன்னை சுமதி, வாயில் போட்டுக் கொண்டு விட்டாள்! முத்தன் பாசறை சிறையில் அடைக்கப்பட்டு விட்டான். நான் அரும்பாடு பட்டு சேமித்து வைத்திருந்த திரவியத்தைக் கொடுத்து, இப்போது அவனை மீட்டு விட்டேன். முத்தாயி: என் முத்தன் விடுதலை அடைந்து விட் டாரா? வேதாளம்: அய்யோ. பரிதாபத்துக் குரிய பாவையே- களங்கமில்லாத உனக்கு இவ்வளவு கஷ்டங்கள் வர லாமா? இன்னும் கேள் இன்பச் சேதியை ! உன் அப்பன் - கொடியவன் உன்னை ஏமாற்றி இந்த திரு மணத்தை ஏற்பாடு செய்தான் என்பது எனக்குத் தெரிந்தது - உடனே ஓடி வந்தேன் உன்னைக் காப் பாற்ற! கல்யாண விருந்தினன் போல வந்து என் நண்பனின் காதலியை விடுவிக்க முயலுகிறேன்!