உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி அந்த சமயத்தில் திருசங்கு வரும் சப்தம் கேட்கிறது. காலடி ஓசை கேட்டதும், முத்தன் அங்குள்ள திரை மறைவில் ஒளிந்து கொள் கிறான். திருசங்கு, முத்தாயி விழித்துக்கொண் டிருப்பதைப் பார்த்து, திருசங்கு: முத்தாயி, இன்னும் தூங்கவில்லை? 65 125 முத்தாயி: தூக்கம் வரவில்லையப்பா! யோசனையில் ஆழ்ந்திருக்கிறேன். திருசங்கு: என்னம்மா யோசனை? முத்தாயி: அந்த வேதாளம் வந்து எனக்கு அறிவு புகட்டி விட்டார் - இத்தனை நாளும் புத்தி கெட்டுப் போய் அந்த முத்தனை நம்பியிருந்தேன். திருசங்கு: மகளே ! நீ தான் பேசுகிறாயா? ஆகா வேதாளம் சொன்னது சரிதான்-முத்தாயி! உன்னைப் பெற்ற பயனை இப்போதே அடைந்தேன். முத்தாயி: அப்பா ! ஒரு உதவி செய்வீர்களா? திருசங்கு: ஆயிரம் செய்வேன் சொல்லு? முத்தாயி: காலையில் : எனக்கும் சுகதேவருக்கும் திரு மணம்/ இப்போது நான் அவரை சந்தித்து சில விஷயங்கள் பேச வேண்டும்! அவரைப் பார்க்க வேண்டுமென்று மனமும் துடிக்கிறது! திருசங்கு: என் ஆசை மகளே ! இதுவா பிரமாதம்-இப் போதே அனுப்புகிறேன்- திருசங்கு, அதைவிட்டு வேகமாக மேல் மாளிகைக்குப் போகிறான், சுகதேவிடம்-