உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

126 இரத்தக் கண்ணீர் திருசங்கு: தம்பீ! என் தங்கமகள் இன்னும் தூங்க வில்லை. சுகதேவ்: ஏன்? திருசங்கு: ஏங்கிக் கொண்டிருக்கிறாள் காண வேண்டுமென்று! சுகதேவ்: அப்படியா? தங்களைக் திருசங்கு: இப்போதே உங்களைப் பார்க்க வேண்டுமாம். சுகதேவ்: ஆகா என் காதல்தேவி !-இதோ வருகிறேன். நெருப்பும் பஞ்சும் நெருங்கியிருந்தால் சும்மாயிருக்கு மா? - மாமா! நீர் நன்றாகத் தூங்கலாம் வருகிறேன் - நான் சுகதேவ், உடனே கண்ணாடியிடம் சென்று தன்னை அலங்காரம் சய்து கொண்டு புறப்படுகிறான் இதற்குள் -முத்தன். முத்தாயி யிடம் சொல்ல வேண்டியவைகளை சொல்லிவிட்டு மாளிகையை விட்டு வெளியேறி விடுகிறான். முத்தாயி, சுகதேவின் வருகைக்காக கா காத்திருக் கிறாள். சுகதேவும் ஆனந்த சாகரத்தில் மூழ்கி உள்ளே நுழைகிறான். அவனைக் கண்டதும் அவள் எழுந்து மரியாதையுடன் தலை குனிந்து நாணமுடன் ஒரு மூலையில் போய் நிற்கிறாள். சுகதேவ்: கண்ணே ! என்னை ஏன் அழைத்தாய்? அட அட பேசமாட்டாயா? இவ்வளவு வெட்கமா உனக்கு? முத்தாயி: வெட்கம் ஒன்றுமில்லை. பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் நாணம். சுகதேவ்: வா - அருகில் வந்து உட்கார்!