________________
மு. கருணாநிதி சுகதேவ், தன்னுடைய ஆடைகளை கழற்ற ஆரம்பிக்கிறான். அவளும் திரைமறைவிலே சென்று - தன் ஆடைகளைக் கழற்றி அவனிடம் வீசுகிறாள். இருவரும் உடைமாற்றிக் கொள் கிறார்கள் சுகதேவ், பெண்ணாகவும் - முத்தாயி, ஆணாகவும் தோன்றுகிறார்கள். பிறகு, இருவரும்- யாருக்கும் தெரியாமல் மாளிகையின் பின்புறம் வழியாக ஆற்றங்கரையை நோக்கிச் செல்லு கிறார்கள். ஆற்றங்கரையிலே காத்திருக்கும் குதிரைவீரர்கள் யாராவது அப்பக்கம் நடமாடு கிறார்களா என்று கவனித்தபடி உலவுகிறார்கள். அவர்கள் கண்ணிலே ஒரு ஆணும் பெண்ணும் வருவது தெரிகிறது. அவர்கள் யாருக்காக வழிமேல் வீழி வைத்திருந்தார்களோ; அந்த முத்தாயி வந்துவிட்டாள் என்று பூரிப்படை கிறார்கள் 129 ஒருவீரன்: முத்தன் - முத்தாயி இருவருமே வருகிறார்கள். மற்றவன் : சரி புறப்படுங்கள். குதிரைகள் நடதடவெனக் கிளம்புகின்றன. சுகதேவும். முத்தாயியும் நடந்துசெல்லும் பாதையில் அவர்களை குதிரைவீரர்கள் வளைக் கின்றனர். சுகதேவ் ஓடுகிறான் - குதிரைவீரர் கள் அவனை விடுவார்களா? பாவம் அவன் தான் முத்தாயி உடையிலே இருக்கிறானே--- சுகதேவ் பெண் எனக் கருதப்பட்டு பிடிக்கப் படுகிறான். முத்தாயி அதைவிட்டு ஓடிவிடுகிறாள். வீரர்களும் அவளைப் பின்தொடரவில்லை. பிடி பட்ட சுகதேவின்வாய் கட்டப்படுகிறது- குதிரை யிலே தூக்கிவைத்துக்கொண்டு வீரர்கள் புறப்