உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128 இரத்தக் கண்ணீர் பரவாயில்லை. சுகதேவ்: பேசுவோம் உன்னுடன் பேசுவதைத் தவிர எனக்கு வேறென்ன இன்பம் இருக்கிறது? முத்தாயி: அருமையான நிலவு - இருவரும் ஆற்றங் கரைப்பக்கம் போய் சுவையான கதைகளைப் பேசு வோமே! சுகதேவ்: ஆகா நினைத்ததைச் சொன்னாய் புறப்படு என்கண்ணே! வா! முத்தாயி: உஸ் தொடக்கூடாது. இதெல்லாம் நாளைக்கு!- வாருங்கள் போகலாம். சுகதேவ்: தயாராயிருக்கிறேன். முத்தாயி: ஆணும் பெண்ணும் சமம் என்றீர்களே; நீங்கள் பெண் உடையிலும்-நான் ஆண் உடையிலும் செல்லலாமா? சுகதேவ்: அய்யோ பெண் உடையிலா? முத்தாயி: பார்த்தீர்களா - பெண் என்றால் இழிவா? சுகதேவ்: இல்லை இல்லை - யாராவது வெட்கமாகயிருக்கும். பார்த்தால் - முத்தாயி: யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத்தானே போகப் போகிறோம் நீங்களும் நானும் ஒருயிரும் ஈருடலும் என்கிறபோது - நீங்கள் என் ஆடைகளை யும் நான் உங்கள் ஆடைகளையும் அணிந்து கொள் வதிலே என்ன தவறு ! சுகதேவ். தவறேயில்லை ! தங்க கட்டியே ! நீ சொல்வது போலவே செய்கிறேன்.