உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி காட்சி 39] 133 (பாழடைந்த கோவில் முத்தனும், முத்தாயியும் - ஒரு பாழடைந்த கோயிலின் மண்டபத்தில் உட்கார்ந்து கொண் டிருக்கிறார்கள். எதிர் காலத்தைப் பற்றிய சிந்தனையில் அவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள். முத்தாயி: தாங்கள் வந்து என்னை விடுவிப்பீர்கள் என்ற செய்தி எவ்வளவு மகிழ்ச்சி தந்தது தெரியுமா? முத்தன் : உன்னை மீண்டும் அடையப் போகிறேன் என்ற உணர்ச்சி எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி யூட்டியது என்று உனக்குத் தெரியுமா? முத்தாயி: இல்லை-என்னுடைய மகிழ்ச்சிதான் அதிகம். முத்தன் : இல்லை வைரத்தின் ஜொலிப்பைவிட அதை அணிந்து கொள்பவரின் சிரிப்பில்தான் ஜீவன் அதிகம். நீ வைரம் - நான் அணிந்துகொள்பவன். நம்முடைய முத்தாயி: அத்தான் அதிருக்கட்டும்; அடுத்த திட்டம் என்ன? இந்தக் கோயிலிலேயே குடியிருப்பதா? - இந்த அழகான தேவதைகளை என் னால் பார்க்கவே முடிய வில்லை. முத்தன்: இந்த நாட்டில் எங்கிருந்தாலும் நம்மைப் பிடித்து விடுவார்கள். முத்தாயி: பிறகு எங்குதான் போவது? முத்தன்: சிறுத்தையூர் பேய்விட்டால் - நாம் தப்பிவிட லாம். அது வேறு நாடு - வேங்கை புரத்தானுக்கு 9