________________
136 காட்சி 41] இரத்தக் கண்ணீர் (திருசங்கு வீடு வேதாளம், திருசங்கு வீட்டின் கதவைத் தட்டுகிறான். திருசங்கு வெளியே வருகிறான். அவன் முகம் வாட்டமாக யிருக்கிறது. ருசங்கு: என்ன சமாச்சாரம்? வேதாளம்: நல்ல சமாச்சாரம்தான் - திருசங்கு ! பாளையக்காரர் மகனை நீ ஏமாற்றிக் கெடுத்துவிட் டாய் என்று உன்மீது வழக்கு ஏற்பட்டால் என்ன செய்வாய்? திருசங்கு: வழக்கா? வேதாளம்: ஆமாம் - அதற்கு இதோ ஆதாரம் ! சாமியா ராகப் போய்விடப் போகும் சுகதேவின் ஓலையே சாட்சி! திருசங்குவிடம் கடிதத்தைக் காட்டிவிட்டுத் தன் கையிலேயே பத்திரப்படுத்திவிடுகிறான். திருசங்கு: எனக்கு ஒன்றுமே புரியவில்லையே-நான் நினைத்ததைப் போலவும் நடக்கவில்லை போலிருக் கிறதே. அப்படியானால் முத்தாயி எங்கே போனாள்? வேதாளம்: எங்கு போனாளோ. என்ன சொல்லுகிறாய்! பலதேவரிடம் இந்த ஓலையைக் காட்டட்டுமா-அல் லது என்னை நல்லது செய்துகொள்கிறாயா? திருசங்கு: என்னய்யா எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறீர். வேதாளம்: திருசங்கு - தீயை அணைப்பதாயிருந்தால். எனக்கு நூறுபொன் தரவேண்டும். இல்லையேல் இது