________________
மு. கருணா நி தி 71 137 பலதேவரிடம் காட்டப்படும். பாளையக்காரர் குடும் பத்திலே சம்மந்தம் நடத்த சூழ்ச்சிசெய்தாய் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவாய்-என்ன பதில் சொல்லு கிறாய்? திருசங்கு: ஒரு பதிலுமில்லை. நீ எதுவேண்டுமானாலும் செய்துகொள்--நானே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். வேதாளம்: அப்படியானால் வந்ததை அனுபவித்துக் கொள். மகளைக் காட்டி மாளிகையைப் பிடிக்க எண்ணினாய்... என் செய்வது எண்ணியபடி நடந் தால் ஈசன் ஒன்றேது. தூண்டில் போட்டாய் பெரிய மீனைப் பிடிக்க... பாவம் தூண்டியிலேயிருந்த சிறிய மீனும் துள்ளிப்பாய்ந்து விட்டது. திருசங்கு: சூழ்ச்சிக்காரா! நீ ஏன் இதில் வீணே தலை யிடுகிறாய்... போ உடனே! ... வேதாளம்: பிறகு யார் தலையிடுவது? பலதேவர் குடும் பத்தைக் கெடுக்க சல்லடம் கட்டிக் கொண்டு நிற் கிறாய் சண்டாளன் நீ ! விஷயம் தெரியாத இளைஞனை ஏமாற்றி... விவாக சுப முகூர்த்தமா நடத்துகிறாய் ரகசிய கல்யாணம் கண்ணாடி மாளிகை உன்னை யெல்லாம் விடக்கூடாது. சூதுக்காரன்! வஞ்சகன் ! குடும்பங் கெடுப்பவன் ! பெண்ணைக் காட்டி கண்ணை மறைக்கும் பேய்-உன்னை என்னபாடு படுத்துகிறேன் பார்! -- ... வேதாளம் போய் விடுகிறான். திருசங்கு கலங்கிப் போய் வீட்டுக்குள் திரும்புகிறான். எத்தனையோ பேராசைக் கோட்டைகள் எல் லாம் இடிந்து தூளாகிக் கிடக்கின்றன அவன்