________________
72 139 மு. கருணாநிதி காட்சி 42] பாளையக்காரர், [பாளையக்காரர் அரண்மனை கோபாவேசமாக அங்கு மிங்கும் உலவிக் கொண்டிருப்பதிலிருந்து இந்தக் காட்சி துவங்குகிறது. வேதாளம், பக்கத்திலே நின்றுகொண்டிருக்கிறான். திருசங்கு, சுகதே வைக் கெடுத்து தன் மகளைக் கொடுக்க முயற் சித்த செய்திகளையெல்லாம் வேதாளம் - பாளையக் காரரிடம் சொல்லிவிட்டான் போலும். இல்லா விட்டால் பாளையக்காரர் அவ்வளவு கொதிக்க வேண்டியதில்லை. பலதேவர் : திருசங்கு...வரட்டும் அவன் இங்கே-என்ன. நல்லவனைப்போல நடந் து நரிவேலை நடத்தியிருக்கிறானே-நயவஞ்சகன் ! பாடுபடுத்துகிறேன். வேதாளம்: நல்லவர்களை கூடாது இந்தக் காலத்தில் நம்பக் பலதேவர் : சரி - சுகதேவனை எப்படிக் கண்டுபிடிப்பது? வேதாளம்: அது ஒன்றும் பெரிய காரியமில்லை... நான் கண்டுபிடிக்கிறேன். பலதேவர்: எவ்வளவு பொருள் அழிந்தாலும் சரி: என் மகனை என்னிடம் அழைத்துவந்தால் போதும். சுகதேவ் வராவிட்டால்--ராணி இறந்தேவிடுவாள் ! வேதாளம்: சுகதேவ் காணாமற்போன செய்தி யாருக்கும் தெரியவேண்டாம். நானே தந்திரமாகக் பிடித்துவந்து தங்களிடம் ஒப்படைக்கிறேன். கண்டு பலதேவர்: மிகவும் நன்றி. செலவுக்காக ஐநூறு பொன் தருகிறேன். சுகதேவ் கிடைத்துவிட்டால், உமக்குப் பரிசாக ஐநூறு பொன் தருகிறேன். நல்ல வேதாளத்தினால் பேச முடியவில்லை. வேளையாக மயக்கமடைந்து விடாமல் சமாளித் துக்கொண்டான். ஆயிரம் பொன்னல்லவா கிடைக்கப்போகிறது அவனுக்கு !--