உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

79 காட்சி 49 மு. கருணாநிதி மரத்தடியில் மயக்கமுற்றுக் கிடக்கிறாள் முத்தாயி. அந்தவழியே ஒரு பெண் வருகிறாள். அவள் மரத்தடியில் கிடக்கும் முத்தாயியைப் பார்க்கிறாள். பரபரப்புடன் ஓடிப்போய் அவ ளைத் தூக்குகிறாள். முத்தாயி! முத்தாயி!" என்று கூப்பிடு கிறாள். முத்தாயிக்கு பேசமுடியாத நிலை. நல்ல வேளையாக அந்தப் பக்கம் குதிரை பூட்டிய ஒரு பல்லக்கு வண்டி போகிறது. அந்தப் பெண் அந்த வண்டியை நிறுத்தி-முத்தாயியை வண் டிக்காரன் உதவியுடன் வண்டியில் தூக்கிவைக் கிறாள். வண்டி வந்து நிற்பதற்கும்-"முத்தாயி" என அந்தப் பெண் கூப்பிடுவதற்கும் - சரியாக, அந்த சமயத்தில் அங்கே வேதாளச் சாமியாரும். சுகதேவனும் வருகிறார்கள். சுகதேவ்: அதோ என் முத்தாயி? என்று கூறி அருகே ஓடுகிறான். வேதாளம் அவனைத் தடுத்து - உடனே 153 வேதாளம்: புத்தியற்ற இளைஞனே! கடவுள் இப் போதுதான் உன் காதலியைக் காட்டியிருக்கிறார். அதற்குள் துள்ளுகிறாயே ...... சுகதேவ்: ஆகா - கடவுள் மிகவும் நல்லவர். எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார். கடவுளே - உனக்கு நன்றி. வேதாளம்: பால பக்தனே ! வா- இந்தப் பல்லக்கு வண்டி எங்கே போகிறதென்று பார்ப்போம்.