உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்சி 53] மு. கருணாநிதி 159 (சுமதி வீடு இரவு நேரம் முத்தாயி மட்டும் படுத்திருக்கிறாள். தெரு விலே ஒரு குரல். முத்தாயி எழுந்துவந்து பார்க் கிறாள். சாமியார் வேடத்திலே வேதாளம் நிற்கிறான். முத்தாயி: யாரய்யா என்ன வேண்டும்.? வேதாளம்: இங்கு முத்தாயி என்பது யார்? முத்தாயி: ஏன் என்ன விசேஷம்? வேதாளம்: முத்தன் சுமதியம்மாள் சொல்லச் சொன்னார்கள் என்பவருக்கு எதிரிகளால் தாக்குதல் ஏற்பட்டு, மரணாவஸ்தையில் ஒரு வீட்டில் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். முத்தாயி: ஆ! அத்தான் !-

வேதாளம் : நீங்கள் தானாமுத்தாயி? என்னோடு வந்தால் அவரை உயிரோடு பார்க்கலாம். முத்தாயி: அத்தான் அத்தான் !... அய்யா அவர் எங்கே யிருக்கிறார் - என்னை அழைத்துப் போங்கள். நரியின் பின்னே மான் தொடருகிறது. வேதாளத்தின் பின்னே முத்தாயி ஓடுகிறாள். இதை ஓரிடத்தில் ஒளிந்து நிற்கும் சுகதேவன் பார்த்து செய்வதறியாமல் பெருமுச்சுவிடுகிறான்.