உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்சி 55] மு. கருணாநிதி 161 (வேதாளத்தின் இருப்பிடம் உள்ளே போர்வையினால் ஒரு உருவம் மூடப் பட்டு கிடக்கிறது. வேதாளமும் முத்தாயியும் உள்ளே நுழைகிறார்கள். தன்னுடைய உயிரினு மினிய அத்தான் சாவின் ஓரத்திலே யிருக் கிறான் என்ற செய்தி கேட்டு ஓடிவரும் முத் தாயியின் அச்சம் நிரம்பியகண்கள் அந்த மூடப் பட்ட உருவத்தைக் காணுகின்றன. வேதாளம்: அதோ உன் காதலன். (உருவம், முத்தாயி என முணகியபடி யிருக்கிறது.) முத்தாயி, அத்தான் என வீறிட்டலறிய வாறு அவனிடம் ஓடுகிறாள், போர்வையை நடுங் கும் கரங்களால் எடுக்கிறாள். கலகலவென சிரித்தபடி வெற்றிவேலன் எழுகிறான். வேதாளம் வெளியே போய்விடுகிறான். முத்தாயி யின் நிலைமையை எப்படித்தான் எழுத்தால் சொல்ல முடியும். நான்கு பக்கமும் வேடர் சுற்றிட நடுவில் சிக்கியமான் போலாகிவிட்டாள். வெற்றிவேலன்: முத்தாயி! முழுநிலவே ஏன் பயப் படுகிறாய் ......உன் அருகே !...... முத்தாயி: தளபதி வெற்றிவேலன். நாடுகாக்க வேண் டிய நீங்கள் இப்படி நடுத்தெரு ரு நாராயணன் ஆகி விட்டீர்கள்... வேண்டாம்; நான் உங்கள் சகோதரி விட்டு விடுங்கள். வெற்றிவேலன்: மலரும் வண்டும் சகோதரர் என்றால் மடையர்கள் தான் நம்புவார்கள். கண்ணே !...