உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

162 இரத்தக் கண்ணீர் முத்தாயி: சீ.. விடு என்னை ! வெட்கங் கெட்டவனே. விஷப்புயலே! உன் காமச் சூறாவளியிலே கவிழ்ந்து விடும், மரமல்ல நான். வெற்றிவேலன்: திட்டு ! நன்றாகத்திட்டு! எழுத்துக்கு எழுத்து தித்திக்கிறது. திட்டு ! கூண்டிலே அடை பட்ட கிளி கத்துவது கோபத்தால் அல்ல. பயத்தால். அதுவும் பழகப்பழக சரியாகிவிடும். முத்தாயி: நெருங்காதே. வெற்றிவேலன்: இந்த நாட்டின் சேனைத்தலைவன் அழைக்கிறேன், என் ஆணைக்கு அடங்காதவர்கள் என்ன ஆவார்கள் தெரியுமா? முத்தாயி: கொன்று விடுவாய். அவ்வளவு தானே. சாவுக்கு பயப்பட மாட்டேன். சாவு உன்னைவிடக் கோரமானதா? இல்லை. இல்லை. ஒருக்காலுமில்லை. வெற்றிவேலன்: முத்தாயி. இரும்பு போன்ற என் கரங் களிலேயிருந்து தப்பிய மலர்கள் எதுவுமே கிடை யாது? ஞாபகம் வைத்துக்கொள்! முத்தாயி: என்னை விட்டுவிடு ; அக்ரமக்காரா!- வெற்றிவேலன்: அக்ரமம் என்ற அச்சாணியிலே தான் அகில உலகமும் சுற்றுகிறது. முத்தாயியின் கையைப் பிடித்து இழுத்து விடுகிறான். அவள் சுற்றிக் கீழே விழுகிறாள் அலறியபடியே!- நெருங்கிய வெற்றிவேலன்: முத்தாயி! இனிமேல் நீ தப்பவே முடி யாது - நீயாகவே இணங்கிவிடு!- அவளைத் தொடுகிறான் - முத்தாயி எழுந்து ஓடிப்போய் கதவில் முட்டிக் கொள்ளுகிறாள்.