________________
மு. கருணா சுகதேவ்: இல்லையம்மா ! இந்தக் குதிரை சரியில்லை. அதற்குள் அவன் அத்தை குறுக்கிடுகிறாள். சிரிப்புடன். 27 அத்தை: ஆமாம், அதனால்தான் இத்துடன் விட்டு விட்டது. சுகதேவ்: அத்தை ! நீ பேசாமல் இரு! இந்தத் தூங்கு மூஞ்சிக் கழுதை கடிவாளம் சரியாகப் போடாமல் முத்தன்: சரியாகத்தான் போட்டேன்! சுகதேவ்: எதிர்த்துப் பேசாதேடா எச்சில் இலை நாயே ! உதை விழும் ஜாக்கிரதை! அரண்மனைக் அத்தை: ஏனப்பா சுகதேவ்: நீ விழுந்து விட்டு அவன் மீது சீறுகிறாய்? முத்தா! நீ போ ! குதிரை யெல்லாம் அப்படித் தான் உதைக்கும். முத்தன் போய் விடுகிறான். சுகதேவ்: அத்தை எனக்கு கோபம் வரும். பலதேவர்: பூங்காவனம்! நீ ஏன் அந்த முத்தனுக்கும் பரிந்து இவ்வளவு பேசுகிறாய்? பூங்காவனம்: அண்ணா! உங்க மகனை முதலில் பொம் மைக் குதிரையில் ஏறி பழக்கப் படுத்திக் கொண்டு ஏ பிறகு குடைராட்டினக் குதிரையிலேறி சவாரி பண்ணிவிட்டு, அதன் பிறகு உண்மைக் குதிரையில் ஏறச்சொல்லுங்க.