உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 33 61 நீ செய்வாயோ என்னமோ-என்னால் முடியுமா? என் வைதீக மனம் இடம் கொடுக்குமா? யோசித்துப் பார்!-உன் அம்மா காவேரி என்று தெரியுமே தவிர அவள் உன்னை யாருக்குப் பெற்றாள் என்பது முத்தன்: அய்யோ போதும் !... திருசங்கு: காதைப் பொத்திக்கொண்டு பயனில்லை - கண்ணை அகலமாகத் திறந்தும் பயனில்லை. கருத்துக் கதவைத் திற! கொஞ்சமாகத் திற போதும்! சீரும் சிறப்பும், சிங்கார மாளிகையும் அழைக்கிறது என் மகளை ! நீ அதை மறுக்கிறாயா? மறுக்கிறாயா முத்தா? மறுத்தால் அது அவள்மேல் உனக்குள்ள காதலுக்கு அடையாளமல்ல. அவளை சீரழிக்க வேண்டுமென்ற உன் கொடிய எண்ணத்துக்குத்தான் அடையாளம்! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். அவளை மறந்துவிடு. இல்லாவிட்டால் முத்தாயி, தன் தகப்பனை மறந்து விடவேண்டும். அப்படி மறந்துவிட்டால், மரக்கிளை யிலே அனாதையாக, அந்தரத்திலே தொங்கும் இந்த திருசங்குவின் பிணம் உன்னை சபிக்கும் - பிணம் உன்னை சபிக்கும் !

உன் முத்தன் : அய்யா ! என் உயிரை மறக்கச் சொல்கிறீர்- மறந்துவிடுகிறேன். திருசங்கு: [ மகிழ்ச்சி பொங்க] முத்தா! முத்தன்: போய்வாருங்கள். திருசங்கு பூரிப்புடன் அதைவிட்டுப் போகி றான். முத்தன் அந்தச் சிறிய அறைக்குள் நடக்க ஆரம்பித்தான். அந்த நடையை சாலையிலே நடந்திருந்தால் எத்தனையோ காத தூரத்தைக் கடந்திருக்க முடியும்! ஒரு