உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 37 69 சுமதி: சரி போகிறேன் முத்தாயி! நான் குளித்து முடிவ தற்குள் வந்துவிடுவாயல்லவா? டி முத்தாயி: வரும் வரையில் குளித்துக்கொண் ரேன்- வெல்லத்தாலா செய்திருக்கிறது உன் உடம்பு -தண் ணீரில் கரைந்துவிட! சுமதி: என் உடம்பு வெல்லமில்லை-இப்போது வந்து வர்ணிப்பார் கற்கண்டே, தேனே. காய்ச்சிய க பாகே! என்றெல்லாம்-அப்போது எண்ணிப்பார்- யாருடைய உடம்பு வெல்லத்தின் வார்ப்படம் என்று! முத்தாயி: வாயாடி? சுமதி ... நான் உன்னை கிண்டல் செய்ய ஆரம்பித்தேன் என்றால் சுமதி: விழலுக்கு நீர் இறைக்காதே முத்தாயி !... அதோ வருகிறார் - பேசு... பேசு... பேசிக்கொண்டேயிரு !... ஆனால் நான் மாத்திரம் ஆற்றோடு போய்விட்டேன் என்று எண்ணிவிடாதே, சீக்கிரம் வா ! சுமதி, சிரித்துக்கொண்டே போய்விடுகிறாள். ஆற்றுக்குப் முத்தாயி, முத்தனுக்கு நேராகப் போகாமல் ஒரு மலர்ச் செடிப் பக்கம் மறைந்து ஒரு மலரை எடுத்து அவன் மீது வீசுகிறாள். அவன் அதைப் பிடித்து, கசக்கி எறிந்தபடி வருத்தமுடன் உட்காருகிறான். முத்தாயி அவனிடம் சென்று, முத்தாயி: ஏன் வருத்தமாயிருக்கிறீர்கள் ?... இரண்டு நாட்களாக வரவில்லையே : நான் கோபித்துக்கொள் வேன் என்று முந்திக்கொள்கிறீர்களா? முத்தன் : ஒன்றுமில்லை முத்தாயி... 5