உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. க ணாநிதி 29 73 இந்த ஆடும் மரக்கிளையில், அதோ ஓடும் வெள்ளத் தில்--இரண்டில் ஒன்றில் என் பிணத்தைப் பார்க்க தயாராகிக்கொள்ளுங்கள். முத்தன் : முத்தாயி--என்னை மன்னித்துவிடு. முத்தாயி: மறதியை மறந்தும் நினைக்கமாட்டீர்களே. முத்தன்: படைத் தளபதியிடம் பெயரைப் பதிவு செய்து விட்டேனே. முத்தாயி: செய்தால் என்ன, விலகிக்கொள்வது பெரிய விஷயமா? முத்தன்: விலகிக்கொள்ளலாம். ஆனால்... முத்தாயி: என்ன மறுபடியும் ஆனால்? வீரர்க்கு அழ கில்லை யென்று இலக்கணம் கூறுகிறீர்களா? நான் சொல்கிறேன் என்று கோபிக்காதீர்கள்! மன்னித்து விடுங்கள் என்னை. நீங்கள் சேர்ந்திருப்பது படையே அல்ல ! நாட்டை அடிமையாக்கி யிருப்பவனின் கோட்டைக் காவலர்களில் ஒருவனாக நீங்கள் போகி றீர்கள். முத்தன்: உண்மைதான். ஆனால் நான் சொல்லவந்தது... முத்தாயி: என்ன? முத்தன்: படையில் சேர்ந்து விலகினால் அதற்குத் தண் டம், நூறு பொன் தரவேண்டுமாம். இல்லையேல் விடுவிக்க மாட்டார்கள். முத்தாயி: நூறு பொன்! சரி-நான் தருகிறேன். முத்தன்: நீயா? முத்தாயி: ஆமாம். என் திருமணத்திற்காக, அப்பா சேர்த்துவைத்து, யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்