உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 காட்சி 28] இரத்தக் கண்ணீர் | பழுகாரின் எல்லை ஐயனார் கோவில் ஒன்று இடிந்துகிடக்கிறது. அங்கே வெற்றிவேலன் படை. நிற்கிறது. பின் தொடர்ந்த ஊர்மக்கள் யாருமில்லை. முத்தன் விலங்குடன் பல்லக்கு வண்டியில் ஏற்றப்படு கிறான். வண்டியிலிருந்தபடியே, வேதாளமும் வெற்றிவேலனும் - முத்தாயி பற்றி திட்டம் தீட்டுகிறார்கள். வெற்றிவேலன்: சரி வேதாளம்-ஊரின் எல்லை வந்து விட்டது! நீர் திரும்புகிறீர் என்பதுபற்றி வருந்து கிறேன். வேதாளம். பிரபூ, உங்கள் அன்புக்கு நன்றி. வெற்றிவேலன் : முத்தாயி விஷயம் மறந்துவிடாதீர்! அவளை என்னால் மறக்க முடியவில்லை. வேதாளம்: மறப்பேனா நான். வெற்றிவேலன்: அவள் ஒரு வீணை ! அழுதுகொண்டு தான் பேசினாள். ஆனால் ஒவ்வொரு சொல்லும் சுருதி யோடு சேர்ந்து அதிர்ந்தது. வேதாளம்: அந்த வீணை தங்களிடம் வரவேண்டும்-- அவ்வளவுதானே ! தங்களின் நித்ரா மண்டபத்தின் நிரந்தர வீணையாகவே அவளை ஆக்கிவிடுகிறேன். வெற்றிவேலன்: வேண்டாம் வேண்டாம். திருமணம் என்கிற அளவுக்கு போய்விடாதீர் ! தேனும் தெவிட்டி விடும், திருமணம் என்ற கிண்ணத்தில் ஊற்றினால்! மங்கைகள் மலர்களாகவும் ஆண்கள் வண்டுகளாக