உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 49 93 முத்தன்: என்ன செய்வது, எதிர்பாராமல் நடந்து விட்டது -- போகிறேன் விடு. முத்தாயி: போங்கள் 1 விடுதலையடைய உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் அவர்களிடம் சொல்லி ஒரு ஈட்டியையாவது என் நெஞ்சின் மீது வீசச் செய்யுங்கள். வெற்றிவேலன் : சே ! கனியின் மீது கத்திவீச்சா? முத்தன் : முத்தாயி! குற்றம் என்மீதில்லை என்பதை யாவது நீ உணர்ந்துகொள் ! முத்தாயி: பிறகு யார்மீது? நான் அனுப்பியது வந்து சேரவில்லையா? இதற்குள், அங்கே திருசங்கு பிரவேசிக் கிறான் - கோபாவேசமாக! திருசங்கு: மானங்கெட்ட பெண்ணே ! வா இங்கே, என் அந்தஸ்தைச் சந்திசிரிக்க வைக்கிறாயே. முத்தாயி: அப்பா! என்னை விட்டுவிடுங்கள். விட்டு விடுங்களப்பா--விட் விடுங்கள் ! இதோ போகிற வண்டிகளில் ஒன்று என்னை சாக அடித்துவிட்டுப் போகட்டும். இதோ என்னுயிரையே எடுத்துச் செல்கிறார்கள் - இனி இந்த நடமாடும் சவம் இருந்து என்னப்பா பயன்?- என்னை விட்டுவிடுங்கள். முத்தாயி அலறியபடி தெருவில் விழுந்து விடுகிறாள். திருசங்கு அவளைப் பிடித்து பரபர வென்று இழுத்துக் கொண்டுபோகிறான். அவளது பொன்னுடல் மண்மீது தேய்கிறது. வெற்றிவேலன் தன் வண்டிக்குப் போகிறான். மீண்டும் வாத்தியங்கள் ஒலிக்கின்றன. வலம் போகிறது. ஊர்