உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணா வீட்டில் மாடுபோல் உழைத்திருக்கிறான். ஏன் நாம் மீட்டிருக்கக்கூடாது? 97 அவனை பலதேவர்: உனக்கென்ன பை பைத்தியமா பூங்காவனம்? பாருங்கள் ஸ்வாமி ! என் தங்கையின் பரிதாபம் யார்மேல் விழுகிறது என்று! எவனோ ஒரு அனாதை ! சாமியார்: உம்! எல்லாம் விதிப்படி நடக்கும். யாரும் தடுக்க முடியாது. பூங்காவனம்: நல்ல வீதி! காரர்கட்கும் சுலபமாக சோம்பேறிகட்கும், சூதுக் அகப்படுகிற வார்த்தை. விதியாம் -- விதி! சுகதேவ்: ஆமாம் அத்தை ! அப்பா பாளையக்காரராக இருப்பது அவர் விதி! சாமியார் பெண்களை வெறுப் பது அவர் விதி ! நீ கல்யாணம் வேண்டா மென்று காலங் கழிப்பது உன் விதி ! பூங்காவனம்: மண்ணாங்கட்டி! அந்த விதியென்கிற வார்த்தை உன் வாயிலே அகப்பட்டு விழிக்கிறதே : அது அதனுடைய விதி ! பாளையக்காரர்: சரி, இரண்டுபேரும் வாயை மூடுங்கள். தொலைந்து போனவனைப் பற்றி நீங்கள் ஏன் போர் தொடுக்கிறீர்கள் ? சாமியார் அசட்டுத் தனமாக சிரிக்கிறார். பூங்காவனம் அதைவிட்டுப் போய் விடுகிறாள். அவள் எங்கே போவாள் போனாள்! படுக்கை யில் விழுந்தாள் ! அழுதாள் ! வழக்கம் போல அந்த மூன்று சிலைகளும் அவளைப் பார்த்து பரிதாபப் பட்டன.