உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 காட்சி 30] இரத்தக் கண்ணீர் (திருசங்கு வீடு பூங்காவனம் அங்கே அழுதுகொண்டிருக் கிறாள்.இங்கே முத்தாயி துன்பத்தின் எல்லையில் தூக்கி யெறியப்பட்டுத் துடித்துக்கொண்டிருக் கிறாள். அவளுக்கு இனி யார்தான் ஆதரவு ? தந்தையோ அவளை நல்ல விலைக்கு விற்க நேரம் பார்த்துக்கொண்டு திரிகிறார். எத்தகைய இடை யூறுகள் வரினும் அவைகளைத் துரும் பாக்கிப் போடும்-- அவளது காதலனின் திருமுக தரிசனமும் இனிக் கிடைப்பதற்கு வழியில்லை. நூறு பொன்கள் அவளது தந்தை, தன் மகளைப் பலியிடும் திருவிழாவின் செலவுக்காக சேமித்து வைத்திருந்த திரவியம். அதைக் கொடுத்துத் தன்னுடையவனை மீட்கத் துணிந் தாள் அதற்குக் குறுக்கிட்ட வஞ்சகர்தான் யாரோ? தடாகத்து நீரும் அதன் தெளிந்த அமைதியும் போலிருந்த அவர்களின் காதல் வாழ்வில் சந்தர்ப்பம் கல் வீசிவிட்டதே! சோகக் கணைகள் எட்டு திக்கிலுமிருந்தும் பாய்ந்திடு கின்றன அவள் மீது! அவளால் அழுவதைத் தவிர வேறெதையும் செய்யமுடியவில்லை. வாய் திறந்து கதறி அழுவது அவளுக்கு ஆறுதல் போலும்! சுமதி வருகிறாள். அவள் வரவேற்கப் படவில்லை. முத்தாயி" எனக் கூப்பிடுகிறான் வாய் நிறைந்த வாத்சல்யத்தோடு ! . முத்தாயி: எங்கே வந்தாய் காதகி! வேண்டு மென்று கேட்டிருத்தால், நூறு என்ன ஐநூறு பொன் எப்படியாவது தேடித் தந்திருப்பேனே