10.
நிலைபெற்ற சீர்கொள் - சிறப்பைப் பெற்ற, இரத்தின நற்கிரி -
நல்ல இரத்தினகிரியில். வாழ் - எழுந்தருளியுள்ள முருகன் - பாலமுருகன். அன்பிற் சிறந்தவன் - பத்தியில் சிறந்தவனாகிய, பாலமுருகன் அடிமை - பால முருகன் அடிமை என்னும் பெயரை உடைய. தொழும் - தொழுது வணங்கும். பொன் பெற்ற - பொலிவை அடைந்த கீர்த்தி - புகழை உடைய, வடிவேல் - வடிவேலை உடைய, குமரனை - பால முருகனை. போற்று - வாழ்த்தி வணங்குவாயாக. நெஞ்சே - என்னுடைய மனமே.
நெஞ்சே - என்னுடைய மனமே, உனக்கு - நினக்கு. ஒன்று - ஒரு கருத்தை சொல்லுவன் - சொல்லுவேன். கேள் - நீ அதைக் கேட்பாயாக. இந்த நீள் நிலத்தில் - இந்த விரிந்த பூமண்டலத்தில். எஞ்சாத - என்றும் குறையாத, இன்பம் உற - இன்பத்தை அடைய. வேண்டின் - நீ விரும்பினால், ரத்தின ஏர் மலையில் - அழகை உடைய இரத்தின கிரியில். துஞ்சாத - துயில் கொள்ளாத தேவர் - தேவர்கள்; தேவர்கள் துயிலுவது இல்லை. தொழுகின்ற வணங்குகின்ற, வேலன் - வேலாயுதத்தை உடைய பாலமுருகனுடைய துணை அடிகள் - இரண்டு திருவடிகளை, நம் சார்பு என்று - நமக்குப் பற்றுக் கேடாக உள்ளது என்று. எண்ணினால் - எண்ணியிருந்தால். வாராத - இதுவரையிலும் வராத, இன்பநலம் - நல்ல இன்பம். வரும் - உண்டாகும்.
வருவார் பலர் - பலர் பால முருகன் சந்நிதிக்கு வருவார்கள். வந்து - வந்து வணங்கி தம் குறை - தமக்கு நிறைவேற வேண்டிய காரியங்கள். தீர்வர் - நிறைவேறப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் - களிப்புடனே. மரு ஆர் - மனமாலை சூட்டும். திருமணம் - விவாகம். செய்யப் பெறுகுவர் - செய்யும்படியான நிலையை அடைவார்கள். மாமுருகன் - பெருமையை உடைய பால முருகன் எழுந்தருளியுள்ள திரு - பெருமை. வீறுகின்ற - மிகுதியாக உள்ள, இரத்தின நற்கிரி - நல்ல இரத்தின கிரியில் எழுந்தருளியுள்ள. சேய் - பால முருகனுடைய அடிகள் - திருவடிகளை. வெரு அற - எதலுைம் உண்டாகும் அச்சம் அறும்படி போற்றி - வாழ்த்தி. தொழும் அவர் - வணங்கும் அந்த அன்பர்களுடைய பேறு - பெறும்பாக்கியம். விளம்புமதே - சொல்லி முடிவதோ?
விளம்புகைக்கு - சொல்லுவதற்கு எட்டாத - எட்ட முடியாத வீரம் - வீரத்தை உடையவன் - பெற்றவன். வேல் முருகன் - வேலாயுதத்தைத் தன் திருக்கரத்தில் ஏந்திய பால முருகன். உளம் புக - நம்முடைய உள்ளத்தில் புகுந்து இருக்க எண்ணிடின் - நினைத்தால், எல்லாம் - வேண்டிய வரங்களை எல்லாம். உதவும் - தந்தருளும், உயர் அருளான் - உயர்ந்த கருணையை உடைய
24