பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


41.

42.

43.

உண்டாக, ஏ அசைநிலை ஏண் - ஒப்பு. ஒன்று - ஒன்றும். இலாத - இல்லாத வேலவனை-வேலாயுதக் கடவுளை. பணிந்து-வணங்கி, இன்புறுதல் - இன்பத்தை அடைதல். 'உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம், உடம்பினில் உத்தமனைக் காண்” என்பது இங்கே உணர்வதற்குரியது. கானும் - அறியத்தக்க இவ்வுண்மை - இந்த உண்மையான கருத்தை அறிந்தேன் - அடியேன் தெரிந்து கொண்டேன். இரத்னக் கவின் கிரியில் - அழகிய இரத்தின கிரியில் எழுந்தருளியுள்ள மாண் உடை-மாட்சிமை உடைய, பாலமுருகனை - பால முருகன் என்னும் திருநாமம் உடைய பெருமானை. போற்றி - வாழ்த்தி, வணங்கினன் - பணிந்தேன்.

வணங்கிய - வளைந்த, வில்லுடை - வில் என்னும் ஆயதத்தை உடைய, வீரர்கள் ஆயினும் - வீரம் உடையவர்கள் ஆனாலும், மாற்றலரை - பகைவர்களை, பிணங்கிய - பகையுடன் செய்த போரினில் - யுத்தத்தில் வெற்றி கொண்டாலும் - வெற்றியை அடைந்தாலும் பெறும் பயன் என் - அடையும் பிரயோசனம் யாது? கணம் கொடும் - கூட்டத்துடன் என்றது யமதூதர் கூட்டத்தை. காலன் வரின் - யமன் உயிரை உடம்பிலிருந்து எடுத்துச் செல்ல வரும்போது, அவர் - அந்த வீரர்களுடைய வீரந்தான் - வீரமானது. காப்பதுவோ - அந்த யமனிடத்திலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதோ? மணம் கொள் - நல்ல வாசனை வீசுகின்ற. கடம்ப மலர் மாலை - கடம்ப மலர்களைக் கொண்டு கட்டிய மாலையை மார்பில் அணிந்த. பால - பால முருகனே, வடிவேலனே - வடித்த வேலாயுதத்தைக் கையில் ஏந்திய பால முருகனே.

வடிவுடை மாதர் - அழகிய வடிவத்தை உடைய பெண்களின். மயக்கினில் - காம மயக்கத்தில், வீழ்ந்து - அழுந்தி. மதி தவறி - புத்தி கெட்டு, கொடிய பிணியால் - அதனால் உண்டான கொடுமையான நோயினால், வருந்தும் நிலை - வருத்தத்தை அடையும் நிலையை பெறும் - பெற்ற கோலம் உளார் - தன்மையைக் கொண்ட மனிதர்கள். நொடிய - நீளமாக உள்ள. வைவேல் உடை - கூர்மையான வேலாயுதத்தை உடைய, பால முருக - பால முருகன் என்னும் திருநாமம் உடையவனே. நின் - தேவரீருடைய நிலவு - என்றும் நிலவுகின்ற. அடியில் - திருவடிகளில், படிய - தரையில் உடம்பு படியும்படி, வணங்கிடின் - பணிந்தால். நற்பயன் - நல்ல பயன்கள். யாவும் - எல்லாவற்றையும். படைப்பவர் - பெறுபவர்கள் ஆவார்கள்.

படைப்பவன் - படைக்கும் தொழிலை உடைய பிரமதேவன்.

ஆணவம் - அகங்காரம். மிக்கு - மிகுதியாக அடைந்து நின்னை - தேவரீரை. கண்டும் - பார்த்தும். பண்பு இலனாய் - நல்ல குணம்

33