உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了4。

75.

76.

குவலயத்தே-உலகத்தில் வாழ-வாழ்க்கையை நடத்த கருதும் - எண்ணும். மதியிலி-அறிவு இல்லாதவன்; 'கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே, வாழக் கருதும் மதியிலிகாள்' என்பதனை நினைவிற் கொண்டு பாடியது. மாசு - குற்றத்தை. அகற்றி - போக்கி, ஆழ -மனத்தில் ஆழமாக தாளை - திருவடியை. புரிவாய் - செய்வாய். சூழும் - மிகுதியாக அமைந்த மேவிய - எழுந்தருளிய, தூயவனே - பரிசுத்தமாக உள்ள பால முருகனே.

தூயவர் - மனமொழி மெய்களில் சுத்தத்தை உடைய சுத்தரான பெரியவர்களுடைய நேயம் - நட்பு. இருந்தால் - இருக்குமானால், மெல மெல - சிறிது சிறிதாக, தூய்மைவரும் - நமக்கும் சுத்தம் உண்டாகும். ஏய பொருந்திய பல - பலவாகிய, தீங்கு எல்லாம் - எல்லாத் தீமைகளும். நீங்கும் - போய்விடும். என - என்று, ஏ அசை நிலை. இயம்புவர் - பெரியவர்கள் சொல்வார்கள். ஆல் அசை நிலை, ஆய அத்தகைய. அத் தூயவரோடு - அந்தப் பரிசுத்தம் உள்ளவர்களோடு. ஏ அசை நிலை. இணங்க - சேர்ந்திருக்க. அருள் தருவாய் - அடியேனுக்குக் கருணை பாலிப்பாய். மாயன் மரு.கா - திருமாலினுடைய மருகனே, இரத்தின நற்கிரி - நல்ல இரத்தினகிரியில் வாழ்பவனே - எழுந்தருளியுள்ள பால முருகனே,

கிரி என - மலை என்று சொல்லும்படி ஓங்கி - சிறப்பைப் பெற்று. துளக்கம் இல்லாது - நடுங்குவது இல்லாமல். கிளர்பவர்கள் - விளங்குபவர்கள் நரி என - நரி என்று சொல்லும்படி. ஒல்கி - ஒடுங்கி. நடுங்குதல் - நடுக்கத்தை அடைதல். இந்த மா ஞால இயல் - இந்தப் பெரிய உலகத்தின் இயல்பு ஆகும். உரிய - வணங்குவதற்கு உரிய நின்றன்னை - தேவரீரை வணங்கின் பணிந்தால், அமைதி - சாந்தம். உளத்து - மனத்தில், அமையும் - சேரும். அரிய - அருமையாகிய, இப்பேற்றை - இதனை அடையும் பாக்கியத்தை. அருள்வாய் - அடியேனுக்கு வழங்கியருளுவாய். இரத்ன அடல் வெற்பனே - இரத்தினகிரியில் எழுந்தருளியுள்ள ஆற்றல் மிக்க பாலமுருகனே.

பன்னும் - பன்னுகின்ற. பனுவல் - பஞ்சு, என - என்று சொல்லும்படி, நெஞ்சு - அடியேனுடைய மனம், பாய்ந்து - பல இடங்களுக்குப் பாய்ந்து சென்று. படர் தரும் - படரும், "நான்படும் பாடு சிவனே நவிலுபஞ்சுதான் படுமோ?" என்னும் திருவருட்பாவில் உள்ள பகுதி இங்கே சிந்திப்பதற்குரியது. இஃது - இந்த மனம். உன்னும் - எண்ணும். பொருள் ஒன்று அல - ஒரு பொருள் அல்ல. பல கோடி உறும் - பல கோடியாக அமையும். இதனை - இந்த மனத்தை. நின் - தேவரீருடைய நல் அடி இணை

44