பக்கம்:இரத்தினமாலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


32. இதைப்பார்த்ததும் செட்டியார் சந்தோஷமடைந்தவராய் கூலிக் காரனிடம் ஒரு ரூபாய் கொடுக்கப்போனார். அவன் அதை நிராகரி த்து வீட்டு வெளியில் வந்தான். பழையபடி செட்டியாரும் ராஜாத் தினமும் மீண்டும் ஆசனத்தில் அமர்ந்து சப்தமற்றதும் புகையற்றது மான கைத்துப்பாக்கியை பெடுத்து கெட்டுப்போனதை சரிப்படுத்திக் கொண்டும், பெட்டியை திறந்து நசைகளைப்பார்வையிட்டுக் கொண்டு மிருக்கும் சமயம் ஒருவன் மரோப்பிய உடை தரித்துக்கொண்டு அறைக் குள் பிரவேசித்தான். இதைக் கண்டதும் செட்டியாருக்கும் ராஜ சத்தினத்துக்கும் ஏற்பட்ட கடுக்கத்திற்கும் அச்சத்திற்கும் அள வில்லை. அதேசமயம் ஒரு அடி முன்னால் வைத்தால் உடனே படி தரிசனம் என்றான், பின்னும் நடு நடுங்கிப் போனார்களாயினும் அவ னது முகத்தையுற்று நோக்கினார்கள். அவன் கையில் சிறிய கைத் துப்பாக்கி பளிச்சென்று பிரகாசித்துக்கொண்டேயிருந்தது. ஆனால் அவன் யாரென்று மட்டும் தெரிந்து கொள்ள முடியவில்லை. வந்தவன் இவர்களை யொன்றும் செய்யவில்லை ஆனால் அவர்கள் பார்த்துக்கொ ண்டிருந்த நகைகளைப்பார்த்துக்கொண்டே செட்டியாரைப் பார்த்து ஷண்முகம் செட்டியாரே! ஒரு பேனாவும் சுடி தமுங்கொண்டு இந்த ககைகளின்பட்டி யெழுதிக்கொடுத்துவிடும். எனக்கு நகைகள் வேண் டாம். என்று கூறினான். செட்டியார் பதில்பேசாமல் இங்கிபுட்டிபேனமுதலியன எடுத்து வந்து பட்டி எழு துஞ் சமயம் ராஜாத்தினம் வந்தவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயம் அவன் தன்கையி லுள்ள கெட்டித்த ரிவால்வரைப் பிடித்தவண்ணம் இருவர் மீதும் நோக்கம் செலுத்திக்கொண்டேயிருந்து வந்தமையினால், ராஜரத்தினம் நினைத்த வண்ணம் செய்யமுடியாமல் திகைத்தான். இதற்குள் செட்டியார் பட்டி யெழுதி முடித்தார், அவரையே வாசிக்கச்செய்து வாங்கி சே பியிற்போட்டுக்கொண்டு பின்புறமாகவே நகர்ந்து வெளியில் வந்து கதவைத் தாளிட்டுக் கொண்டு போனான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/26&oldid=1278621" இலிருந்து மீள்விக்கப்பட்டது