பக்கம்:இரத்தினமாலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


அத்தியாயம் 5. அங்கயற்கண்ணியும் குடுகுடுப்புக்காரனும்: ஒரு நாள் அதிகாலை து தவன் உதயமாகுமுன் ஆகாய ஒளி பிர காசிக்கும் நேரமிருக்கும். மதுரைமாநகரில் வண்டியூர் தெப்பகுளம் போகுமாஸ்தாவில் முளிச்சாலை என்னுமிடத்தில் வடக்குபார்த்த ஓர் உயர்ந்த விட்டின் முன்புறம் ஒருகுடுகுடுப்பாண்டிவந்து நின்றுகொண் அம்பா பனுக்கு! அம்பாபலுக்குற ! உள்ளதை சொல்டி, உத் தமிமகமாயி! நல்வாக்கு கொடுடா நாயின. பதினெட்டாம்படி கருப்பா பலிக்கட்டும், ஜடாமுனி சொல்லுடா ஜல்திலே சொல்லு. அம்பாபலு க்குறா! இந்தவீட்டிலே இருக்கிற மீனாட்சி! நல்ல காலம் வருது. ஐயா வுக்குகல்லகாலம் வருது, அம்மாவுக்கு யோகம் வருது, ரோகம் வரு து, அம்பா பலுக்குறு! அம்பா பலுக்குறு ! நகைமேலே நகை வருது. வைராகைவருது. துணிமேலே துணிவருது. பட்டுத்துணிவருது. பால்பொங்கப் போவுது, கால் விங்கப்போவுது. அம்மா ! ஜெக சம்பா பல்குடி. கல்வாக்கு சொல்லடி. ஆனை கட்டிவாழும் அத்தனை செல்வம் வரப்போவுது. இனிமேலே ஒண்ணும் கொறவு இல்லே என்று கூறிவிட்டுப் போய்விட்டான். இந்த சமயம் அதிகாலை யானபடியினால் செட்டியாரும் வீட்டி லேயே யிருந்தார். இருவரும் விழித்துக்கேட்டுக் கொண்டேயிருக் தார்கள். - அங்கயற்கண்ணி தன் ஆசைநாயகனை நோக்கி, “ என்ன! உங் களைத்தான். இப்போ குடுகுடுப்புக்காரன் சொன்னதைக் கேட்டீர் களா?" என்று கூறினாள், 'ஆம், கேட்டேன். உனக்கு நல்ல காலம் வருகிறதாகக் கூறி னான்" என்றார் செட்டியார். "எனக்கு இப்படி யாரேனுஞ் சொன்னால் நம்பிக்கையே கிடை யாது, ஆனால் இன்றைய தினம் குடுகுடுப்புக்காரன் சொன்ன திலிரு ந்து இடது கண் துடிக்கிறது. என்னமோ ஒருவித சந்தோஷம் தோன்றுகின்றது' என்றாள் அங்கயற்கண்ணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/27&oldid=1278622" இலிருந்து மீள்விக்கப்பட்டது