பக்கம்:இரத்தினமாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


" என்னமோ ? உனக்கு எல்லகாலம் வருறேதென்றும், ஈகை மேல் நகையும், புடவை மேல் புடவையும் வருகிறதென்றானே எங்கே விருந்து வருகிறதோ?" என்றார் ஷண்முகஞ் செட்டியார். உல்களைத் தவிர, வேறு எங்கிருந்து வரும். நீங்கள் என்னமோ பரிகாசஞ் செய்கிறீர்களே" என்றாள். " இல்லை, இல்லை, பரிகாசமில்லை. இந்தகுடுகுடுப்பாண்டிக்கு எப்படி தெரிந்தது என்றுதான் சிந்திக்கிறேன் " அவர்கள் அதிகாலையில் சுடுகாட்டிற்குச் சென்று சுடலைமாடன் முதலிய தெய்வங்களை வணங்கி வருவதால் அவர்கள் அருள் இவர் களுக்குண்டாகி வருங்காலத்தைச் சொல்லுகிறார்கள் என்று கூறி னாள் அங்கயற்கண்ணி, இம்மொழிகளைக்கேட்டதும் செட்டியாருக்கு சிறிது மனச்சமாதானமுண்டாயிற்று. செட்டியார் தனது காகக்கடனை முடித்துக்கொண்டு காலையக ணம் உண்டு காபியருத்தி வெற்றிலைப்பாக்கு கொண்டுவரச் சொல்லி விட்டுக்கைப்பெட்டியை திறந்து சில நகைகளை யெடுத்து மேசையின் மேல் வைத்தார். அதேசமயம் அங்கயற்கண்ணியும் தாம்பூலத் தடன்வந்து சேர்ந்தாள். அங்கயற்கண்ணிக்கு நகைகளைக் கண்டதும் மனம் பூரித்துப் போயிற்று. டி.செ:- அங்கயற்கண்ணே ! இந்தா இந்த நகைகளை யெடுத்து அணிந்துக்கொள். இது நேற்றுதான் சென்னையிலிருந்து பிரபல ககை வியாபாரிகளால் பார் ஸ்சலில் வந்து சேர்ந்தது அங்கயற்கண்ணி;--என்னென்ன நகைகள் வரவழைத்திருக்கி தீர்கள். 4. செ:--வைாக்கோடு 1 ஜதை: வைாவளையல் 2 ஜதை, வைா மாட்டல் ஒரு ஜதை, வைா திருகுபில்லை யொன்று, வைாமிழைத்த அட்டிகை ஒன்று, வைரமிழைத்த செக்லேஸ் (Necklace) ஒன்று, வைரமோதிரங்கள் 6, வைரமிழைக்கப்பட்ட ஒட்டியாணம் ஒன்று ஆகபதினான்கு நகைகள் வந்திருக்கின்றன. இஃதல்லாமல் சென்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/28&oldid=1278623" இலிருந்து மீள்விக்கப்பட்டது