பக்கம்:இரத்தினமாலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

வில் பிரபல ஜவுளி வியாபாரிகளிடமிருந்து பிதாம்பாச் சேலைகளும் பெங்களூர் சேலைகளும் ரவிக்கைகளும் வந்திருக்கின்றன. இன்று முதல் இவைகளை நீ உபயோகித்து வரவேண்டியது.. அங்கயற்கண்ணி:- இதற்கெல்லாம் எவ்வளவு பணம் ஆயிற்று? 4. செ:--ஒருலத்து இருபதினாயிரம் ரூபாய் வரையாயிற்று, அங்கயற்கண்ணி:--- போன மாசம் ஒரு ஜதை வைத்தோடு வேணுமென்று கேட்டபோது இப்போமுடியாது என்றீர்களே. ஷ.செ:-- அந்தசமயம் அப்படியிருந்தது, என்று சொன்னார். இதேசமயம் குடுகுடுப்புகாரனும் கடைக்குவந்துகின்று மீண்டும் தன் குடுகுடுப்பை தட்டினான். செட்டியார் அச்சுதனைக்கூப்பிட்டு அவ லுக்கு ஒருபிடி அரிசி போடு என்றார். குடுகுடு --சாமி! நீங்கோ மேலேபோட்டு கஞ்சி போன காதே கிந்தே குடுத்தாக்கா போதும்' என்று கெஞ்சினான். அந்த சமயம் அங்கயற்கண்ணி ஒரு கிழிந்து போன குடுத்தினி யொன்று கொண்டு வந்து கொடுத்தாள். குடுகுடுப்புக்காரன் அதை வாங்கி பார்த்துக்கொண்டே விட் டைக்கடந்து போகும் சமயம் இன்றும் ஒன்று கிடைத்தது. கள வாடுகிறவன் எவ்வளவு சாமர்த்தியவானாயினும், துப்பறிபவனுக்கு இடங் கொடாம லிருக்கிறதில்ல' என்று சொல்லிக்கொண்டே போ னான், ஷண்முகஞ்செட்டியாரும் சிறிது நேரத்துக்கெல்லாம் வெளியே புறப்பட்டு போய்விட்டார். அங்கயற்கண்ணிக்கு அன்றுண்டான சந்தோஷத்திற்கு அளவு மிதமில்லை. செட்டியார்சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கயற்கண்ணி ஆடையாபாண மணித்து அலங்காரஞ் செய்துக்கொண்டு நிலைக்கண் ணாடியின் முன்னின்று தன் அழகைத்தானே பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தாள். 5505/ - 3NS7 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/29&oldid=1278624" இலிருந்து மீள்விக்கப்பட்டது