பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

135


முதன் முதல் பூத்த மலர் இன்று காலை எனக்கு அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.

-எ

உரிமையுடன் இருக்கிற மாந்தனுடைய மனவுறுதி விடுதலையாகவுள்ள மற்ற மாந்த உறுதிகளுடன் இணக்கம் காண முயல வேண்டும். உள்ளுயிர் வாழ்வின் பொருளே இதில் தான் அடங்கியுள்ளது.

-ஆ

உனது விரலின் தொடுகை என் வாழ்க்கையின் நரம்புகளைக் கிளர்த்திடச் செய்யட்டும்; வெளிப்படும் இன்னிசை உன்னுடையதாகவும் என்னுடையதாகவும் இருக்கட்டும்.

-மின்

நமது உண்மையான இயல்பை நாம் அடையும் போது, நாம் விடுதலை பெறுகிறோம்.

-சா

எனது வாழ்க்கையில் கனிபோல் வட்ட வடிவமைக்கப் பட்ட உன் உலகம் மகிழ்ச்சியாலும், துயரத்தாலும் பக்குவமடைந்துள்ளது. மூல நிலத்தின் இருட்டில் விழுந்து மற்றொரு படைப்புக்காகக் காத்திருக்கிறது.

-மின்

விடுதலையில் நமது மன உறுதி அடங்கியுள்ள