பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

183


படுத்தவே நமக்கு வாழ்வு இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

-ஆ

உங்களுடைய இளைய அலைபாயும் உள்ளங்கள் ஒன்றுசேர்கின்றனவா என்று நான் கண்காணித்து வருகிறேன். ஆர்வம் பொங்கும் இரண்டு இணை விழிகள் தங்கள் அமைதியை உடைக்கவும் தங்களுக்காகப் பேசவும் இசையை இரந்து கொண்டு நிற்கின்றன.

-தோ

இந்த உலகம் முழுவதும், எல்லையில்லாத வெட்டவெளியும் குழந்தைக்காக, புதிய வாழ்வுக்காகவே படைக்கப்பட்டவை.

-நா

உலக இசை மேடைக்குத் தன் குரலையும் பங்களிப்பாய்த் தரும் போதுதான் படைப்பாளி என்ற அளவில் நமது கட்டற்ற உரிமையும் உயர் மகிழ்ச்சி காண்கிறது.

உனது ஆடி ஓசைகளின் தாள இசையை நானறிவேன், எனது நெஞ்சத்துள் அவை துடித்துக் கொண்டிருக்கின்றன.

-தோ

தாயின் கைகளில் சிரித்துக் கொண்டிருந்த குழந்தை வெட்ட வெளிச்சத்திற்கு ஓடி வந்து, கொண்டிருக்கிறது.