பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே ஒரு நிலைத்த மருட்கை வியப்புதான். வாழ்க்கை என்பது அது தான். -ப.ப

****

பெண்ணே, இறைவனது படைப்பு மட்டுமல்ல நீ. மனிதர்களின் படைப்பும் தான் நீ. தங்கள் தங்கள் உள்ளங்களிலிருந்து இயற் பண்புகள் என்றென்றும் உனக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். நீ ஒரு பாதி பெண், மறுபாதி கனவு. -தோட்

****

தனக்குத் தெரிந்ததையெல்லாம் கைகழுவி விட்டு, தெரியாத ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது காதல். - -ப.ப

****

அங்கே கூர்மதி தன்னுடைய முறைமைகளைக் காற்றாடிகளாக்கிப் பறக்க விடுகின்றது. மெய்மை உண்மை நிகழ்சிகளின் தளைகளை அறுத்து விடுகின்றது. -ப.ப

****

உறங்கிக் கொண்டிருக்கும் பறவைகளைக் கூடு எவ்வாறு தாங்கி நிற்கின்றதோ, அதே போன்று அமைதி உனது குரலைத் தாங்கி நிற்கிறது. -ப.ப.

****