உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காதற் பாடல்


நிலப்பூ நிலத்துக்கு எவ்வளவு அண்மையிலிருக்கிறதோ அதுபோல அவள் என் மனதுக்கு அண்மையிலுள்ளாள்; ஒய்ந்த உறுப்புகளுக்கு உறக்கம் இன்பம் தருவதுபோல் அப்படி அவள் எனக்கு இன்பம் தருகிறாள். மாரிக்காலத்தில் கட்டற்ற வெள்ளம் பாயும் ஆறுபோல நான் அவளிடம் கொண்ட காதல், என் வாழ்க்கை ஆறாகக் கரையுரண்டோடுகிறது. அலைகளின் ஒசையாலும் நீரோட்டத்தின் சலசலப்பாலும், ஆறு பாடிக்கொண்டு வருவதுபோல எனது காதல் பாடல் எனது காதலியின் உயிரிலே கலந்து பெருக் கெடுத்தோடுகிறது.

-கா.ப